×

சீனாவுடன் ஒப்பந்தங்கள் போட்டதால் குக் தீவுக்கான நிதியுதவி திடீர் நிறுத்தம்: நியூசிலாந்து அதிரடி

வெலிங்டன்: பசிபிக் பெருங்கடலில் உள்ளது குக் தீவு. 15க்கும் மேற்பட்ட தீவுகள் அடங்கிய இந்த நாட்டின் மக்கள் தொகை 15,000 பேர் ஆகும். சுயாட்சி நாடான குக் தீவுகளுக்கு ராணுவம் மற்றும் பாஸ்போர்ட் சேவைகளை நியூசிலாந்து தான் வழங்குகிறது. ஆனால் சமீப காலமாக குக் தீவு நாடு சீனாவுடன் மிகவும் நெருக்கம் காண்பித்து வருகிறது.

சமீபத்தில் சீனாவுடன் குக் தீவு பல்வேறு ஒப்பந்தங்களையும் போட்டுள்ளது.பசிபிக் தீவில், தன்னுடைய செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் இதுபோன்ற சிறிய தீவுகளுக்கு சீனா நிதி உதவி உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. அந்த வகையில் குக் தீவுகளுடனும் சீனா ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் எதிரொலியாக குக் தீவுக்கு வழங்கப்படும் ரூ.95.42 கோடி நிதியை நியூசிலாந்து திடீரென நிறுத்தியுள்ளது.

 

The post சீனாவுடன் ஒப்பந்தங்கள் போட்டதால் குக் தீவுக்கான நிதியுதவி திடீர் நிறுத்தம்: நியூசிலாந்து அதிரடி appeared first on Dinakaran.

Tags : Cook Island ,New Zealand ,Wellington ,Pacific Ocean ,Cook Islands ,China ,Dinakaran ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...