வாஷிங்டன் : உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெறும் போர் 3ம் உலகப் போராக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் மத்தியிலான போர் 2014 பிப்ரவரி முதல் தொடர்கிறது. ஆனால் 2022 பிப்ரவரி 24 அன்று ரஷ்யா பெரிய அளவிலான தாக்குதலுடன் முழு போராக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது,”ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்தால் உலகப்போராக மாறலாம். இது போன்ற சம்பவங்கள் மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும்.
சென்ற மாதம் மட்டும் 25,000 பேர் உக்ரைன் போரில் கொல்லப்பட்டுள்ளனர்; அதில் பெரும்பாலானோர் ராணுவ வீரர்கள். உக்ரைன் போரில் மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவே அமெரிக்கா விரும்புகிறது. போரை நிறுத்த அமெரிக்கா கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் 3ம் உலகப்போரை நோக்கி தள்ளும்; அதை அமெரிக்கா விரும்பவில்லை. போர் நிறுத்த முயற்சி தவிர்த்து அமெரிக்கா, உக்ரைன் போரில் எந்த விதத்திலும் தலையிடவில்லை. போரில் அமெரிக்கா தலையிடுவதை உக்ரைனும் ஐரோப்பாவும் விரும்புகின்றன. அமெரிக்கா 350 பில்லியன் டாலர் வரை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது; ஆனால் அதில் எந்த பலனும் இல்லை.”இவ்வாறு தெரிவித்தார்.
