×

சீனாவில் வெள்ளம் 30,000 பேர் மீட்பு

பீஜிங்: சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள பல இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஹூவாய்ஜியில் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. நகரில் உள்ள தெருசாலைகள் கால்வாய்களாக மாறியுள்ளன. நகரில் உள்ள பெரும்பாலான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி கிடப்பதால் அங்கு வசித்து வரும் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

The post சீனாவில் வெள்ளம் 30,000 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Floods ,Beijing ,Guangdong Province ,southern China ,Huaiji ,Dinakaran ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு