×

கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் அதிரடி கைது

சேலம், ஜூன் 17: சேலத்தில் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானவரை நீதிமன்ற உத்தரவுபடி போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் கிச்சிப்பாளையம் கடம்பூர் முனியப்பன் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரேசன் (39). இவர் கடந்த 2013ம் ஆண்டு வீராணம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் இவருக்கு ஐகோர்ட், முதலில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும், அதன் பின்னர் வீராணம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதையடுத்து மார்ச் மாதம் ஜாமீனில் வெளியே வந்த குமரேசன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. கடந்த 3 மாதமாக அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவரை பிடிக்க 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து வீராணம் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் குமரேசன், ஜான்சன்பேட்டை காக்காயன் சுடுகாடு பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அஸ்தம்பட்டி போலீசார் அங்கு விரைந்து சென்று குமரேசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கொலை வழக்கில் ஜாமீனில் வந்து தலைமறைவானவர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kumaresan ,Kadambur Muniyappan Koil Street, Kichipalayam, Salem ,Dinakaran ,
× RELATED வாலிபரை தாக்கிய ரவுடி உள்பட 4 பேர் கைது