×

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஏடிஜிபி ஜெயராம் ஆஜராகவில்லை என்றால் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆள் கடத்தல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் கோரிய பூவை ஜெகன் மூர்த்தியின் மனுவை விசாரித்த ஐகோர்ட், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டது. ஆள் கடத்தலுக்கு ஏடிஜிபி ஜெயராம் அரசு வாகனத்தை பயன்படுத்தியுள்ளார். பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

The post சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : POOWAI JEKANMURTHY ,ADGB JAYARAMAN ,CHENNAI ,HIGH COURT ,Poovai Jeganmurthi ,Chennai High Court ,AIcourt ,Jairam ,ATGB ,Jekanmurthi ,Poovai Jekanmurthi ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...