×

பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக இருந்த கே.ஆர்.வெங்கடேஷ் நீக்கம் : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சென்னை :பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கே.ஆர்.வெங்கடேஷ் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பாஜகவில் இருந்து நீக்கி பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநில செயலாளராக பணியாற்றி வந்த திரு.K.R.வெங்கடேஷ் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுகிறார்.ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாஜக ஓபிசி அணி மாநில செயலாளராக இருந்த கே.ஆர்.வெங்கடேஷ் நீக்கம் : நயினார் நாகேந்திரன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : K.K. ,state secretary ,BJP ,OPC ,R. Venkatesh ,Nayinar Nagendran ,Chennai ,Rawudi K. ,R. ,Venkatesh ,Tamil Bharatiya Janata Party ,R. Venkatesh Removal ,Dinakaran ,
× RELATED டிச.22ல் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க...