×

பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும்

கோவை, ஜூன் 12: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை கிழக்கு மண்டல கிளை மாநாடு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஒண்டிப்புதூர் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதற்கு செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சண்முகம், மண்டலக்குழு உறுப்பினர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய நிர்வாகிகளாக விஜயகுமார், துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கருப்பசாமி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த மாநாட்டில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும், ஒண்டிப்புதூர் சிவலிங்கபுரம், சூர்யா நகர் ரயில்வே கேட்டை புதிய ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் வரை நிரந்தரமாக பூட்டும் திட்டத்தை கைவிட வேண்டும், ஒண்டிப்புதூர் எஸ்ஐஎச்எஸ் காலனி ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடித்து மக்கள் போக்குவரத்திற்கு திறந்து விட வேண்டும் உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore East Zone ,Communist Party of India ,Ondipudur party ,Vijayakumar ,Zone ,Shanmugam ,Zone Committee ,Selvaraj… ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து துறை சார்பில்...