காரமடை, டிச.20: காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமார் 14 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்த குப்பைகள் நகராட்சியில் பணிபுரியும் 32 நிரந்தர தூய்மை பணியாளர்கள் மற்றும் 83 ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் மூலமாக சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்நிலையில் காரமடை நகராட்சிக்குட்பட்ட 17-வது வார்டு அம்பேத்கார் நகர் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மை பணியாளர்கள் பணியாற்றியது குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் ‘‘குப்பைகள், கழிவுகள் மற்றும் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள் கையுறை, காலுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களுடன் பணி புரிய வேண்டும். ஆனால்,காரமடை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணியாற்றி வருகின்றனர்.
