×

வீட்டில் புகுந்து நகை திருட்டு

கோவை, டிச. 18: கோவை இருகூர் எல்ஜி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி முத்துலட்சுமி (51). இவர், அடிக்கடி சென்னையில் வசிக்கும் தனது மகளை பார்க்கச்செல்வது வழக்கம். இதேபோல், கடந்த மாதம் 22ம் தேதி சென்னை சென்றார். இந்நிலையில், கடந்த 6ம் தேதி அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனைப்பார்த்து அண்டை வீட்டார் சென்னையில் உள்ள முத்துலட்சுமிக்கு செல்போன் மூலம் தெரிவித்தனர். அவர் கோவை திரும்பி வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டிற்குள் உடைமைகள் சிதறி கிடந்தது. உள்ளே பீரோவில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Tags : Coimbatore ,Ramalingam ,Muthulakshmi ,LG Nagar, ,Irukur, Coimbatore ,Chennai ,
× RELATED எஸ்ஐஆர் பணிகள்; பூர்வீக விவரங்கள் மீண்டும் ஆய்வு