×

வருமானம் குறைவால் வேளாண் பணிகளிலிருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல்

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலத்திட்ட குழு அலுவலகத்தில் மாநில திட்டக்குழு சார்பில் தமிழ்நாடு முதல்வர் இடம் அளிக்கப்பட்ட அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: மாநில திட்ட குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் வேளாண்த்துறை அல்லாத வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளது என்று 12 கிராமங்களில் ஏற்கனவே மேற்கொண்ட ஆய்வுகள் மீள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 15 முதல் 34 வயதுக்குட்பட்ட தொழிலாளர்களே இந்த மாற்றத்தின் முக்கிய காரணியாக இருந்து வருகிறது என தெரிய வருகிறது.
வேளாண் துறையை பொறுத்தவரை இளைஞர்கள், இளம் பெண்கள் வருவதில்லை வேளாண் அல்லாத துறைகளுக்கு செல்கிறார்கள்.

2030க்குள் இலக்குகள் உள்ளன அதற்கான இலக்குகளை அடைய என்ன செய்யவேண்டுமென்று 650 பக்க அறிக்கையை வழங்கியுள்ளோம். வாகன உற்பத்தித்துறையில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாம் என்னனென்ன செய்யவேண்டும் எதிர்க்காலத்திலும் முன்னணியில் இருக்க என்ன செய்யவேண்டும் அது குறித்தும் அறிக்கையில் விளக்கியுள்ளோம். உயர்கல்வியுல் உயர் நிலையில் உள்ளோம். அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்தும் சம்பளம் அதிகமுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும், உலகளவில் ஆராய்ச்சி மையங்களை இந்தியாவை நோக்கி நகர்த்துகின்றன. அந்தவகையில் தமிழகத்தை நோக்கி வருங்காலங்களில் எப்படி ஈர்ப்பது என்பது குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறையில் தொடர்ச்சியான வேலைவாய்ப்பு, தொடர் வருமானம் குறைவு என்பதால் வேளாண்மை துறைக்கு செல்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனினும் விவசாய உற்பத்தி குறையவில்லை என்றார்.

 

The post வருமானம் குறைவால் வேளாண் பணிகளிலிருந்து வேறு துறைகளுக்கு மாறும் நிலை காணப்படுகிறது: மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தகவல் appeared first on Dinakaran.

Tags : State Planning Commission ,Jayaranjan ,Chennai ,Tamil Nadu ,Deputy ,Ezhilagam, Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,State Planning Commission… ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...