×

வீட்டின் பால்கனி இடிந்தது: 5 பேர் படுகாயம்

மாதவரம்: மூலக்கடை பகுதியில் வீட்டின் பால்கனி இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை மாதவரம் மூலக்கடை அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் ஜிக்கா. இவருக்கு சொந்தமான வீட்டில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பேர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். நேற்றிரவுதொழிலாளர்கள் அனைவரும் முதல்மாடியின் பால்கனி கைப்பிடிச் சுவரில் சாய்ந்தப்பபடி பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென கைப்பிடிச் சுவர் சரிந்து விழுந்ததில், கட்டிட இடிபாடுகளுடன் சேர்ந்து தொழிலாளர்களும் விழுந்து சிக்கியுள்ளனர்.

அவர்களது கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீட்டினர் வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். தில் மகேஸ்வரன், பாராமால், தாபால்ஷா, கோபால், சுஷாந்த் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து மாதவரம் இன்ஸ்பெக்டர் பூபாலன் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளரிடம் விசாரணை நடத்துகின்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post வீட்டின் பால்கனி இடிந்தது: 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Muhalkadai ,Zika ,Madhavaram Mulkadai Annai Satya Nagar, Chennai ,Odisha ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை