×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறைகள் ரீதியான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறைகள் ரீதியான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை, பதிவுத்துறை, கூட்டுறவு ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன், துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பேரவையில் அறிவித்த திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றி ஆலோசனை நடைபெற்று வருகிறது. முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி முதல்வர் அறிவுறுத்தல் வழங்குகிறார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறைகள் ரீதியான ஆய்வுக்கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Secretariat ,Highways, Registration Department and Cooperatives departments ,Ministers ,E.V. Velu ,Dinakaran ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...