×

அனுஷ்கா படத்தில் பாடல் பாடியுள்ள தனுஷ்

தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தாலும், அனுஷ்காவுக்கு மட்டும் ஏனோ புதுப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும், பான் இந்தியா ஹீரோ பிரபாஸ், விரைவில் அனுஷ்காவை காதல் திருமணம் செய்ய இருக்கிறார் என்று அடிக்கடி பரவும் தகவல் கூட, அனுஷ்காவுக்கு புதுப்பட வாய்ப்பு குறைய முக்கிய காரணமாகும். இந்நிலையில், மகேஷ் பாபு இயக்கத்தில் உருவாகும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் அனுஷ்கா நடித்து வருகிறார்.

நவீன் பாலிஷெட்டி ஹீரோவாக நடிக்க, முக்கிய வேடங்களில் ஜெயசுதா, முரளி சர்மா, நாசர் நடிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் இப்படம், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான ‘என்னடா நடக்குது’ என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதை தனுஷ் பாடியுள்ளார்.

The post அனுஷ்கா படத்தில் பாடல் பாடியுள்ள தனுஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Anushka ,South India ,Pan India ,Prabhas ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 6 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா