×

திமுகவில் புதிய அணி மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரெ.தங்கம் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டு காலங்களில் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்ததுடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும், ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அம்சமாக மாற்றுத்திறனாளிகள் சமூகத்தை கவுரப்படுத்தும் நோக்கத்தோடு ”மாற்றுத்திறனாளிகள் அணி” அறிவித்துள்ளார். இதற்காக மாற்றுத்திறனாளிகளின் காவலர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. முதல்வரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாற்று திறனாளிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

 

The post திமுகவில் புதிய அணி மாற்றுத்திறனாளிகள் சங்கம் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Disabled Persons' Association ,Chennai ,Tamil Nadu Disabled Persons' Association ,President ,Re. Thangam ,M.K. Stalin ,Chief Minister ,Disabled Persons' Welfare Department ,Dinakaran ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...