×

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பருல்

குமி: ஆசிய தடகள சாம்பியன்ஷிப், 5000 மீட்டர் ஓட்ட போட்டியில் இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் குமி நகரில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் கஜகஸ்தான் வீராங்கனை நோரா ஜெருடோ தனுய், 14 நிமிடம் 58.71 நொடிகளில் ஓடி தங்கம் வென்றார். இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 15 நிமிடம், 15.33 நொடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

ஜப்பான் வீராங்கனை யுமா யமமோட்டா வெண்கலம் பெற்றார். நேற்று நடந்த, மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் சீன வீராங்கனைகள் 43.28 நொடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றனர். இந்திய வீராங்கனைகள், 43.86 நொடிகளில் ஓடி வெள்ளியும், தாய்லாந்து வீராங்கனைகள் 44.25 நொடிகளில் ஓடி வெண்கலமும் கைப்பற்றினர். மகளிர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் நேற்று, சீன வீராங்கனை வு தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனை குபோவுக்கு, வெள்ளி, இந்திய வீராங்கனை பூஜாவுக்கு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

The post ஆசிய தடகள சாம்பியன்ஷிப் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை பருல் appeared first on Dinakaran.

Tags : Parul ,Asian Athletics Championships ,Gumi ,Parul Chaudhary ,Gumi, South Korea ,Dinakaran ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்