×

திருஷ்டிக்காயை பார்த்து வெடிகுண்டு என கருதி சிவசேனா நிர்வாகி அலறல்

குளச்சல்: குமரி மாவட்டம் குளச்சல் அருகே சாஸ்தான்கரையை சேர்ந்தவர் குமாரன் தம்பி (69). குமரி மாவட்ட சிவசேனா மாவட்ட துணைத்தலைவர். இவரது வீட்டின் கீழ் பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார். அங்கு கேரளாவை சேர்ந்த நகைக்கடை ஊழியர் தங்கி இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்கு வந்த நகைக்கடை ஊழியர் வீட்டின் முன்பு உருண்டை வடிவில் ஏதோ பொருள் கிடந்ததை பார்த்து மாங்காய் என்று கருதி சென்றுவிட்டார்.

நேற்று காலை ஊழியரின் நண்பர் அந்த உருண்டையில் நூல் சுற்றி திரி தெரிவதுபோல் இருந்ததால் குமாரன் தம்பியிடம் கூறினார். அவர் வந்து பார்த்து வெடிகுண்டாக இருக்குமோ? என்று அச்சம் அடைந்து குளச்சல் போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் வந்து பார்த்தபோது, அது வெடிகுண்டு இல்லை, நூல் சுற்றப்பட்ட திருஷ்டி காய் என்பது தெரிய வந்தது. இரவில் அடித்த பலத்த காற்றில் குமாரன் தம்பி வீட்டு மாடியில் கட்டப்பட்ட திருஷ்டி காய் அறுந்து விழுந்துள்ளது.

 

The post திருஷ்டிக்காயை பார்த்து வெடிகுண்டு என கருதி சிவசேனா நிர்வாகி அலறல் appeared first on Dinakaran.

Tags : Shiv ,Sena ,Kulachal ,Kumaran Thambi ,Sastankarai ,Kumari district ,president ,Shiv Sena ,Kerala ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...