×

சட்டீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் மோதல்: கமாண்டோ பலி

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் தும்ரேல் கிராமத்தில் நக்சல்கள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து, கோப்ரா கமாண்டோ படை வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். தும்ரேல் கிராமத்தில் கோப்ரா வீரர்களுக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. இதில்,ஒரு கோப்ரா கமாண்டோ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சண்டையில் ஒரு நக்சலைட்டும் கொல்லப்பட்டார்.

The post சட்டீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் மோதல்: கமாண்டோ பலி appeared first on Dinakaran.

Tags : Naxalites ,Chhattisgarh ,Raipur ,Dhumrel ,Cobra ,Dinakaran ,
× RELATED டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர்...