×

வேட்பாளர் தேர்வில் வெடித்த மோதல்; பாஜக தலைமை அலுவலகம் முற்றுகை: தொண்டர்கள் ஆவேசம்

 

கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் வேட்பாளர் பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மாநில தலைமையகத்தை முற்றுகையிட்டனர். மேற்குவங்க மாநிலம் அலிபுர்துார், வைஷ்ணவ் நகர் தொகுதி வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தொண்டர்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், பெலிகட்டா, ஹவுரா, கோசாபா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள், நேற்று கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.

பெலிகட்டா தொகுதியில் பார்த்தா சவுத்ரி என்பவரை வேட்பாளராக நிறுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலுவலகத்திற்குள் புகுந்து நிர்வாகிகள் சிலர் ரகளையில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுப்படுத்த மாநில தலைவர் சமிக்க பட்டாச்சார்யா, தேசிய பொதுச்செயலாளர் சுனில் பன்சல் மற்றும் பூபேந்திர யாதவ் ஆகியோர் அதிருப்தியாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பாக சமிக்க பட்டாச்சார்யா கூறுகையில், ‘குறைகள் கேட்கப்படும், ஆனால் கட்சிக்கு எதிராக செயல்படுபவர்கள் தொண்டர்களாக இருக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து ஆலோசிக்க எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரியுடன் சமிக்க பட்டாச்சார்யா டெல்லி விரைந்தார்.

Tags : BJP ,Kolkata ,West Bengal assembly elections ,Alipurduar ,Vaishnav Nagar ,West Bengal ,Beligatta ,
× RELATED கங்கையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட...