×

48வது கோடை விழா மலர் கண்காட்சி ஏற்காட்டில் கலெக்டர் நேரில் ஆய்வு

ஏற்காடு, மே 23: ஏற்காட்டில் 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று மாலை தொடங்கவுள்ளது. கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை பார்வையிட லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வனத்துறை சார்பில், மலர் கண்காட்சி திடலில் யானை, காட்டெருமை, முயல், மான் உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது. இந்நிலையில், மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா முன்னேற்பாடு பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு செய்தார். மலக் கண்காட்சி திடலில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். சுற்றுலா பயணிகள் வரும் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி, சிரமமின்றி எடுத்துச்செல்ல வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post 48வது கோடை விழா மலர் கண்காட்சி ஏற்காட்டில் கலெக்டர் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : 48th Summer Festival Flower Exhibition ,48TH SUMMER FESTIVAL AND FLOWER EXHIBITION ,Summer Festival ,Flower Exhibition ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி...