×

டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது மும்பை

மும்பை: ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. ஐபிஎல் 18வது தொடரின் 63வது லீக் போட்டி மும்பையில் நேற்று நடந்தது. அதில், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின. மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன் களமிறங்கினர். முஸ்தபிசுர் ரஹ்மான் வேகத்தில் ரோகித் சர்மா(5 ரன்) வெளியேறினார். பின்னர் வந்த வில் ஜாக்ஸ் அதிரடியாக ஆடி 21 ரன்னில்(13 பந்து) அவுட்டானார். சூர்யகுமார் களமிறங்கிய நிலையில், குல்தீப் சுழலில் ரிக்கெல்டன்(25 ரன்) ஆட்டமிழந்தார். பின்னர் பொறுப்புடன் ஆடிய சுர்யகுமார்- திலக் வர்மா ஜோடி 55 ரன் சேர்த்தது. 15வது ஓவரில் திலக் வர்மா(27 ரன்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி தர பின்னர் நமன் திர் உள்வந்தார்.

அடுத்த சில நிமிடங்களில் சூர்யகுமார் அரை சதம் கடந்தார். 19வது ஓவரில் இருவரும் அதிரடியாக 3 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 27 ரன் குவித்தனர். மேலும் 20 ஓவரிலும் அதிரடியாக 20 ரன் விளாசினர். 20 ஓவர் முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. டெல்லியின் முகேஷ் குமார் 2 விக்கெட் வீழ்த்தினார். 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து 121 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக ரிஸ்வி 39 ரன், விப்ரஜ் 20 ரன் எடுத்தனர். மும்பை பந்து வீச்சில் சான்ட்னர், பும்ரா தலா 3 விக்கெட், போல்ட், தீபக் சகார், ஜேக்ஸ், கர்ண் சர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 59 ரன் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய மும்பை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.

The post டெல்லியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது மும்பை appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Delhi ,INDIANS ,IPL SERIES ,IPL 18th series ,Mumbai Indians ,Delhi Capitals ,Dinakaran ,
× RELATED இன்று 5வது மகளிர் டி20: இலங்கை ஒயிட்வாஷ்… இந்தியா காட்டுமா மாஸ்?