×

பைக் திருட்டு

புதுச்சேரி, மே 22: புதுச்சேரி நைனார் மண்டபம் முத்தமிழ் வீதியை சேர்ந்தவர் நிஜந்தன் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நிஜந்தன் கடந்த 14ம் தேதி இரவு வீட்டின் எதிரில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மறுநாள் காலை வந்து பார்த்தபோது, அங்கு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இரவில் மர்ம நபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குமார் அளித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Nijanthan ,Muthamizh Veediya ,Nainar Mandapam ,Chennai ,Dinakaran ,
× RELATED மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர் கைது