×

சென்னை பூமி அமைப்பு பாராட்டு சான்றிதழ்

சேலம், மே 22: நற்செயல்கள் தினமானது சமூகத்திற்கு சேவையாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பூமி அமைப்பானது, சமூகத்திற்கும் மற்றவர்களுக்கும் சிறந்த செயல்கள் மூலம் சேவையாற்றுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டும், நலிவுற்றோர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் நற்செயல்கள் பிரசாரம் என்பதை தலைப்பாக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சமீபத்தில் சமூகப் பணியாளர்களை அங்கீகரித்தல், சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், உலக கருணை தினத்தை முன்னிட்டு சமூகத்தில் தேவைப்படுவோருக்கான நலத்திட்ட உதவிகள் செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தி அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டதை மையமாகக் கொண்டு சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பூமி அமைப்பின் மூலம் கல்லூரிக்கு சிறப்பு அங்கீகாரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய அங்கீகாரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கிடைக்க வழிநடத்திய கல்லூரியின் டீன் டாக்டர் செந்தில்குமாரை, பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கணேசன் மற்றும் துணை தலைவர் அனுராதா கணேசன் பாராட்டினர். மேலும் மாணவர்களையும் பூமி அமைப்பின் உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட கல்லூரியின் பூமி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கோகுலப்பிரியா மற்றும் சங்கருக்கு டீன் வாழ்த்து தெரிவித்தார்.

The post சென்னை பூமி அமைப்பு பாராட்டு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : Chennai Bhoomi Organization ,Salem ,Good Deeds Day ,Bhoomi Organization ,Vinayaka Mission ,VIMS Campus Allied Health Sciences College ,Chennai Bhoomi ,Dinakaran ,
× RELATED மூதாட்டிகளிடம் சில்மிஷம் வன்கொடுமை சட்டத்தில் வாலிபர் கைது