×

லக்னோ பந்து வீச்சாளர்: ஒரு போட்டியில் ஆட திக்வேசுக்கு தடை


சன்ரைசர்ஸ் அணி அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி, ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. லக்னோவில் நடந்த 61வது ஐபிஎல் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடிய அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா, 20 பந்துகளில் 59 ரன் குவித்தார். முக்கியமான கட்டத்தில் அவரை அவுட் செய்த லக்னோ அணி பந்து வீச்சாளர் திக்வேஷ், அதை கொண்டாடும் வகையில், ‘அபிஷேக் கணக்கை முடித்து விட்டேன்’ என கிண்டலடித்து கூறும் தொனியில், கையில் எழுதிக் காண்பித்தார்.

இதனால், அபிஷேக்குக்கும் திக்வேசுக்கும் வாக்குவாதம் எழுந்தது. ஏற்கனவே இதுபோன்ற ஒழுங்கீனங்களில் திக்வேஷ் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் போட்டியிலும் அவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அடுத்த போட்டியில் ஆட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டிக் கட்டணத் தொகையில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அபிஷேக் சர்மாவுக்கும், 25 சதவீத போட்டிக் கட்டணத் தொகை பிடித்தம் செய்யப்பட உள்ளது.

The post லக்னோ பந்து வீச்சாளர்: ஒரு போட்டியில் ஆட திக்வேசுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Digwesh ,Lucknow Super Giants ,Digwesh Singh Rathi ,Sunrisers ,Abhishek Sharma ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...