×

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தது.

பிளஸ் 1 தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 மாணவ மாணவியர் எழுத பதிவு செய்திருந்தனர். தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 7557 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 பேர் மாணவியர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 4755 பேரும், சிறைவாசிகள் 137 பேர் தேர்வு எழுதினர்.

அதன் தொடர்ச்சியாக 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வில் தமிழகம் புதுச்சேரியை சேர்ந்த 9 லட்சத்து 13 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றனர். இவர்களில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 பேர் மாணவர்கள், 4லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் மாணவியர் சிறைவாசிகள் 272 பேரம் தேர்வு எழுதினர்.

ஏற்கனவே பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்புகளின் பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 3 நாள் முன்னதாக தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது

தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள https://results.digilocker.gov.in and www.tnresults.nic.in ஆகிய இணைய தளங்களில் மாணவ மாணவியர் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம், மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் செல்போன் எண்களுக்கும், தனித் தேர்வர்களுக்கு அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.

The post தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbil Mahesh ,class general election ,Tamil Nadu ,Chennai ,Minister of School Education ,ZAGAM ,Tamil ,Nadu ,Class ,Election ,Minister Anbil Mahesh ,
× RELATED தமிழ்நாட்டில் மீண்டும் அமைய உள்ள...