- திருப்பூர்
- திமுகா மேற்கு மண்டல பெண்கள் அணி மாநாடு
- கோய்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை
- வென்ற தமிழ் பெண்கள்
- திருப்பூர் மாவட்டம் பல்லாடத்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த காரணம்பேட்டையில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ‘வெல்லும் தமிழ் பெண்கள்’ என்ற தலைப்பில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் திமுக மகளிரணியினர், பெண்கள் என 2 லட்சம் பேர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
மேலும் முதல்வர் ஆற்றிய உரையில்; ‘திரண்டுள்ள மகளிரணியை பார்க்கும் போதே ஃபவர் புல்லாக இருக்கிறது. மகளிர் பவரால் திமுக மீண்டும் பவருக்கு வருவது உறுதியாகி உள்ளது. எப்போதுமே திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மாபெரும் வெற்றியை பெறப் போகிறோம்; அது உறுதி.
பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்; பெண்களின் வெற்றியே நாட்டின் வெற்றி. பெண்களுக்கான தனி அமைப்பு வேண்டும் என மகளிர் மன்றத்தை தொடங்கினார் அண்ணா. மகளிர் மன்றத்தை மகளிர் அணியாக விரிவாக்கம் செய்து வலுவான கட்டமைப்பை உருவாக்கினார் கலைஞர். அண்ணா தொடங்கிய மகளிர் மன்றத்தை மகளிரணியாக கலைஞர் விரிவுபடுத்தினார். பெண் அடிமைத்தனத்தை உடைத்து எறிந்தது திராவிட இயக்கம்தான். பெண்களின் கல்வி உரிமை, சம உரிமைக்கு பாடுபடுவது திராவிட இயக்கம்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரம் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கிடைக்க வேண்டும். நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு அதிகாரம் கிடைப்பதை பாஜக விரும்பவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் செல்ஃபோன் பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளனர். ஆனால் நம் ஊரில் ஆப்பிள் ஃபோன்களை தயாரிக்கும் தொழிற்சாலையில் அதை Assemble செய்வதே பெண்கள்தான். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் சுயமரியாதையை ஏற்படுத்தித் தந்துள்ளது.
மகளிர் உரிமைத் திட்டத்தில் 1.30 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கொடுக்கிறோம். மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மகளிருக்கும் இதுவரை தலா ரூ.28,000 தந்துள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,39,560 கோடி வங்கிக் கடன் வழங்கி உள்ளோம். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி’ என முதல்வர் உரையாற்றினார்.
