×

நாயக்கன்குப்பம் ஊராட்சியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

வாலாஜாபாத், மே 16: வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நாயக்கன் குப்பம் ஊராட்சியில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி ராஜாபாதர், கிளைச் செயலாளர் சேட்டு ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பேரூர் கழக செயலாளர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சஞ்சய்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக தலைமை கழக பேச்சாளர் யாசர் அரபாத் கலந்து கொண்டு திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் கலந்துகொண்டு திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள் பற்றியும், நாயக்கன்குப்பம் ஊராட்சியில் நான்காண்டுகள் செய்யப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்து சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி, ஒன்றிய துணைசெயலாளர் விக்டர் செல்வகுமார், ஒன்றிய துணை செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பேரூர் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post நாயக்கன்குப்பம் ஊராட்சியில் திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK government ,-year achievement ,Nayakkankuppam ,MLA ,Walajabad ,Nayakkankuppam panchayat ,Walajabad South Union DMK ,South Union ,Shekar ,Panchayat Council ,Annakkili… ,year achievement demonstration ,meeting ,Dinakaran ,
× RELATED காஞ்சியில் ரூ.24.64 கோடியில் கட்டப்பட்ட...