- இந்தியா-பாகிஸ்தான் போர்
- Tirupathur
- கம்யூனிஸ்ட்
- மாநில செயலாளர்
- Mutharasan
- இந்திய கம்யூனிஸ்ட்
- இந்தியா
- பாக்கிஸ்தான்
- -பாகிஸ்தான்
- தின மலர்
திருப்பத்தூர்: இந்தியா- பாகிஸ்தான் போர் முடிவில் 3வது நாடு தலையிடுவதா என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி:
இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றம் முடிவுற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. போரால் எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாது. இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது செய்த சம்பவம் பாராட்டுக்குரியது. நாட்டிற்கு பிரச்னை என்று வரும்போது மக்கள் அனைவரும் அரசியல், மதம், ஜாதி, அனைத்தையும் கடந்து எல்லோரும் இந்தியர்கள் என்ற முறையில் ஒருமுகமாக நிற்கின்றனர். அதனை அரசியல் ஆதாயத்திற்காக செயல்படும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது.
நடந்த சம்பவம் பற்றி நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். 2 நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றம் தணிந்தது என்ற அறிவிப்பை அமெரிக்க அதிபர் வெளியிடுகிறார். இதனால் நமது நாட்டு இறையாண்மைக்குள் மூன்றாவது நாடு தலையீடு புதிய முயற்சியாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இந்தியா- பாகிஸ்தான் போர் முடிவு; இந்திய இறையாண்மையில் 3வது நாடு தலையிடுவதா..? முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.
