- தேர்தல் ஆணையம்
- திரிணமுல்
- அபிஷேக் பானர்ஜி
- புது தில்லி
- திரிணாமுல் காங்கிரஸ் குழு
- தில்லி
- தேசிய பொதுச் செயலாளர்
- தூதர்
- அக்கட்சி
புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக 10 பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் குழு தேர்தல் ஆணையாளர்களை டெல்லியில் சந்தித்தது.
இந்த சந்திப்புக்கு பின் பேட்டி அளித்த அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் எம்பியுமான அபிஷேக் பானர்ஜி கூறியதாவது:
தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் அல்ல வாக்காளர் பட்டியல் மூலமாகவே வாக்குத் திருட்டு நடக்கிறது. மகாராஷ்டிரா, அரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை தீவிரமாக எழுப்பியிருந்தால் அந்த தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்க முடியும்.
மேற்கு வங்கத்தில் 1.36 கோடி வாக்காளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது உட்பட வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக பல கவலைகளை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தோம். ஆனால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். நாங்கள் பேசத் தொடங்கியதும், அவர் கோபமடையத் தொடங்கினார். நீங்கள் நியமிக்கப்பட்டவர், நான் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்று நான் கூறினேன். அவருக்குத் தைரியம் இருந்தால், அந்தக் கூட்டத்தின் காணொளியை வெளியிட வேண்டும்.
தேர்தல் ஆணையம் எங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்தவில்லை. எஸ்ஐஆர் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் இருந்தால், நாங்கள் அதை சட்டப்பூர்வமாக எதிர்த்துப் போராடுவோம் என்றார்.
