×

தமிழகத்துக்கு அமித்ஷா வருகை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ நம்பிக்கை

கன்னியாகுமரி: ஆங்கில புத்தாண்டையொட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம் செய்தார். இதன்பின்னர் அவர் கூறியதாவது: வரும் 4ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சிக்கு வந்து புதுக்கோட்டையில் நடைபெறும் தமிழனின் தலைநிமிர் நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார். பின்னர் மறுநாள் ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்யும் அவர், அங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்புகிறார்.

அமித்ஷா வருகை தமிழகத்தில் மிகப்பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் போதை பொருட்கள், வட மாநிலத்தவர் தாக்குதல் அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இதுவரை முடிவு செய்யவில்லை. தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. நடிகர் விஜய்யை பாஜக கூட்டணிக்கு அழைப்பீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

Tags : Amit Shah ,Tamil Nadu ,MLA ,Nainar Nagendran ,Kanyakumari ,English New Year ,BJP ,president ,Kanyakumari Bhagavathy Amman temple ,Union Home Minister ,Trichy ,festival ,Pudukkottai ,
× RELATED சொல்லிட்டாங்க…