×

காசி ஈஸ்வரன் கோயில் திருக்கல்யாண உற்சவம்

வேப்பனஹள்ளி, மே 13: வேப்பனஹள்ளி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் அமைந்துள்ள காசி ஈஸ்வரன் கோயிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை முதலே காசி தீர்த்தம் என அழைக்கப்படும் கோயில் கிணற்றில் புனித நீராடிய பக்தர்கள் வழிபாடு செய்து, குகையில் அமைந்துள்ள 1200 வருடங்கள் பழமையான புகழ்பெற்ற காசி ஈஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சார்பில் 108 சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர், உற்சவர் சிவபெருமான் மற்றும் பார்வதிதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post காசி ஈஸ்வரன் கோயில் திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Kashi Easwaran ,Temple ,Thirukalyana Utsavam ,Veppanahalli ,Kashi Easwaran Temple ,Avalantham village ,Chithirai festival ,Kashi Theertham ,Kashi Easwaran Temple Thirukalyana Utsavam ,
× RELATED பி.எம்.சி டெக் கல்லூரியில் எரிசக்தி சேமிப்பு தினம்