×

திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம்

சிகாஸ் நகர்: இந்தியாவின் அண்டை நாடான திபெத்தின் லாசி கவுண்டியில், இன்று அதிகாலை 2.41 மணிக்கு (இந்திய நேரப்படி) 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி சிகாஸ் நகரில் இருந்ததாகவும், சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிகழ்ந்ததாகவும் சீன நிலநடுக்க நெட்வொர்க்ஸ் மையம் அறிவித்தது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு அல்லது பெரிய பாதிப்புகள் குறித்த உடனடி தகவல்கள் வெளியாக வில்லை. அதிகாலையில் நடந்த நிலநடுக்கத்தால், உறங்கிக் கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் தங்களது வீட்டை விட்டு வெளியேறி பீதியடைந்தனர்.

The post திபெத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Tibet ,Chikas Nagar ,Lasi County, Tibet, India ,National Seismological Center ,Chicas ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் எதிர்ப்புக்கு பதில்...