×

வேப்பந்தட்டை திமுக நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

பெரம்பலூர்,மே.12: வெங்கனூரில் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் நாடு போற்றும் நான்காண்டு- தொடரட்டும் பல்லாண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரம் கூட்டம் : மாவட்ட செயலாளர், எம்எல்ஏ பங்கேற்பு.

திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான, ஆ.இராசா எம்பி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோரது வழிகாட்டுதலோடு, பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக சார்பில் பெரியம்மா பாளையம் ஊராட்சி, வெங்கனூரில், நாடு போற்றும் நான்காண்டு- தொடரட்டும் இது பல்லாண்டு திராவிட மாடல் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியச்செயலாளர் நல்லதம்பி தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ரெங்கராஜ் வரவேற்றார். திமுக தலைமைக் கழக பேச்சாளர் பாஸ்கரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் தங்க சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை பேசினர்.

பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய அவைத் தலைவர் அண்ணன் அம்பேத்கர், வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் மருதாம்பாள் செல்வகுமார், கிருஷ்ண மூர்த்தி, தங்கமணி, தலைமை கழக பேச்சாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய அனைத்து ஊராட்சி கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், ஒன்றிய பிரதிநிதிகள், திமுகவினர், கிராம பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் நன்றி தெரிவித்தார்.

The post வேப்பந்தட்டை திமுக நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Veppandhattai ,DMK ,fourth year achievement street campaign meeting ,Perambalur ,Venganur ,Veppandhattai West Union DMK ,Tamil Nadu ,Chief Minister ,District Secretary ,MLA ,Deputy General Secretary ,Dinakaran ,
× RELATED சம ேவலை, சம ஊதியம் வலியுறுத்தி பெரம்பலூரில் 5வது நாளாக செவிலியர் போராட்டம்