×

மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: தலைமை இயக்குநர் ராஜீவ் கய் விளக்கம்

டெல்லி: மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது என ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் கய் விளக்கம் அளித்துள்ளார். “பாகிஸ்தானில் பல இடங்களில் தீவிரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்தது. மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது. தீவிரவாத கட்டமைப்புகளை தகர்க்கவே தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத வகையில் தாக்குதல் நடத்தப்பட்டது” என சிந்தூர் ஆபரேஷன் தொடர்பாக முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில் ராணுவ நடவடிக்கைக்கான தலைமை இயக்குநர் ராஜீவ் கய் விளக்கம் அளித்துள்ளார்.

The post மிகவும் ஆபத்தான தீவிரவாத முகாம்களை குறிவைத்து மட்டுமே இந்தியா தாக்குதல் நடத்தியது: தலைமை இயக்குநர் ராஜீவ் கய் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Chief Director ,Rajeev Kai ,Delhi ,Chief Director of Military Action ,Rajiv Kai ,Pakistan ,Dinakaran ,
× RELATED குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி