×

பாஜ ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுவோர் மீது தாக்குதல்: பிரதமர் மோடியிடம் காங். தலைவர் ஆதிர் ரங்சன் முறையீடு

புதுடெல்லி: மேற்கு வங்கத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப்பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியிடம் ஒரு கடிதத்தை வழங்கினார். அதில் நாட்டின் சில பகுதிகளில் வங்காள மொழி பேசும் மக்கள் ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர்கள் அந்த மொழியில் பேசுவது தான் ஒரே குற்றம். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர்களாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ஊடுருவல்காரர்களாக நடத்தப்படுகிறார்கள் என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில்,‘‘வங்க மொழி பேசுவோர் மீது நடத்தப்படும் இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்துவதற்கு பிரதமர் மோடி தலையிட வேண்டும். பிரதமர் மோடி நிலைமையை கண்காணித்து வருவதாகவும், இதுபோன்று நடக்காது என்றும் உறுதி அளித்தார்” என்றார்.

Tags : BJP ,Congress ,Adhir Ranjan Chowdhury ,Modi ,New Delhi ,Former ,West Bengal Congress ,
× RELATED பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ்...