புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரையில் மொத்தம் 91,677 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் உச்ச நீதிமன்ற பதிவாளர் வழக்கறிஞர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி வழக்கறிஞர் வழக்கு ஒன்றில் ஆஜராகுவதற்கு ஒரு நாள் முன்பாக வாதிடும் கால வரம்பை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்றும், கால வரம்பை உறுதி செய்யும் வகையில் மூன்று நாட்களுக்கு முன்பாக ஐந்து பக்கங்களுக்குள் வாதங்களை சுருக்கமாக எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் எழுத்துப் பூர்வமாக சமர்ப்பிக்கப்படும் வாதங்கள் எதிர்தரப்பு வழக்கறிஞருக்கும் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், இது வழக்குகளின் விசாரணை நேரத்தை அனைத்து அமர்வுகளும் சரிசமமாக பயன்படுத்த உதவிடும். இந்த நடவடிக்கை என்பது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
