×

பாகிஸ்தான் தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டது: விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம்

டெல்லி: பாகிஸ்தான் தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் அளித்துள்ளார். அவந்திப்புரா, உதம்பூரில் பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.மருத்துவமனைகள், பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீநகர் முதல் நல்லியா வரை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலில் இந்திய ராணுவ தளங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது போல் தவறான தகவல் பரப்பப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

The post பாகிஸ்தான் தாக்குதலில் 4 விமானப்படை தளங்களில் லேசான பாதிப்பு ஏற்பட்டது: விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Pakistan attack ,Wing Commander ,Viomika Singh ,Delhi ,Pakistan ,Avantapura ,Udampur ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...