×

நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப் பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 10.13 லட்சம் அரசுப் பள்ளிகளில் 5,149 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லை. மாணவர்கள் இல்லாத பள்ளிகளில் 70 சதவீதம் பள்ளிகள் தெலங்கானா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ளன. தெலங்கானாவில் ஒரு மாணவர் கூட இல்லாத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,081 ஆக உள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு மாணவர் கூட இல்லாத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 1,571 ஆக உள்ளது. நாட்டில் அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை 6.42%ஆக உள்ளது.

Tags : Union government ,Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது