×

போர் பதற்றம் ஜெய்சங்கருடன் இங்கிலாந்து அமைச்சர் பேச்சு

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் சமூக வலைதளத்தில் பதிவிடுகையில், தீவிரவாதத்தை மையப்படுத்தி எங்களுடைய பேச்சுவார்த்தைகள் அமைந்திருந்தன. தீவிரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மையை காட்ட வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இத்தாலிய துணைப் பிரதமர் அன்டோனியோ தஜானி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி காஜா கல்லாஸ் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஜெய்சங்கர் பேசினார்.

அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் டேமி புரூஸ், ஜெய்சங்கருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் பதற்றத்தை உடனடியாக குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ரூபியோ வலியுறுத்தினார். இரு நாடுகளும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்காவின் ஆதரவு அளிப்பதாக ஜெய்சங்கரிடம் மார்கோ ரூபியோ கூறினார் என்றார்.

 

The post போர் பதற்றம் ஜெய்சங்கருடன் இங்கிலாந்து அமைச்சர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : UK ,minister ,Jaishankar ,New Delhi ,Union Minister ,US ,Secretary of State ,Marco Rubio ,Deputy ,Antonio… ,
× RELATED திருவனந்தபுரத்தில் சத்யாகிரக...