×

57வது லீக் போட்டியில் இன்று வெற்றிக்கு ஆடும் கொல்கத்தா ஆறுதலைத் தேடும் சென்னை

* இன்று இரவு கொல்கத்தாவில் நடைபெறும் 57வது ஐபிஎல் லீக் போட்டில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
* நடப்புத் தொடரில் ஏற்கனவே சென்னையில் ஏப்.11ம் தேதி நடந்த 25வது லீக் போட்டியில் கொல்கத்தா, 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது.
* ஐபிஎல் தொடர்களில், இவ்விரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் களம் கண்டுள்ளன.
* அவற்றில் சென்னை 19 போட்டிகளிலும், கொல்கத்தா 11 போட்டிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. ஒரு ஆட்டம் (2009) மழையால் கைவிடப்பட்டது.
* இந்த ஆட்டங்களில் அதிகபட்சமாக சென்னை 235, கொல்கத்தா 202 ரன் விளாசி இருக்கின்றன.
* குறைந்தபட்சமாக சென்னை 103, கொல்கத்தா 107 ரன் எடுத்துள்ளன.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் கொல்கத்தா 3-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
* இந்த 2 அணிகளும் கடைசியாக மற்ற அணிகளுடன் விளையாடிய தலா 5 போட்டிகளில் சென்னை 1-4 என்ற கணக்கிலும், கொல்கத்தா 2-2 என்ற கணக்கிலும் வெற்றி, தோல்விகளை (ஒரு ஆட்டம் ரத்து) பெற்றுள்ளன.
* ஐபிஎல் தொடரில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள கொல்கத்தா நடப்புத் தொடரில் 11 ஆட்டங்களில் விளையாடி தலா 5 போட்டிகளில் வெற்றி, தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் ரத்தானது.
* 5 முறை பட்டம் வென்ற முன்னாள் சாம்பியன் சென்னை இதுவரை 11 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளது. அவற்றில் 2ல் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதனால் பிளே ஆப் வாய்ப்பு இல்லை.
* அதே நேரம் கடைசி போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியதன் மூலம் அஜிங்கிய ரகானே தலைமையிலான கொல்கத்தா அடுத்த சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.

The post 57வது லீக் போட்டியில் இன்று வெற்றிக்கு ஆடும் கொல்கத்தா ஆறுதலைத் தேடும் சென்னை appeared first on Dinakaran.

Tags : Kolkata ,57th league ,Chennai ,Kolkata Knight Riders ,Chennai Super Kings ,57th IPL league match ,Dinakaran ,
× RELATED 14 சிக்சருடன் 157 ரன் சர்ப்ராஸ் கானின்...