- போயிங் ஃபீல்ட் 4.0 போட்டி
- கருணா பல்கலைக்கழகம்
- கோயம்புத்தூர்
- போயிங் ஃபீல்ட் 4.0
- பெங்களூர்
- இந்தியா
- காருண்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்…
- தின மலர்
கோவை, மே 7: போயிங் பீல்டு 4.0 என்ற தேசிய அளவிலான புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப போட்டி பெங்களூரில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 2077 குழுக்கள் பங்கேற்றன. இதில், காருண்யா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையில் மூன்றாம் ஆண்டு பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் ஆஷிஷ் சாமுவேல், அர்பித் செளஹான் மற்றும் வி. கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டியில் ஆரம்ப சுற்றிகளில் சிறப்பாக செயல்பட்ட காருண்யா குழு உள்பட 7 குழுக்கள் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. இறுதிச் சுற்றில் காருண்யா பல்கலை மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற காருண்யா மாணவர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. இந்த வெற்றியை குறித்து காருண்யா பல்கலையின் வேந்தர் டாக்டர் பால் தினகரன் கூறுகையில், ‘‘எங்கள் மாணவர்கள் சமூக நலனுக்கான தீர்வுகளை உருவாக்கும் திறனுடன் இருப்பதால், இந்த முயற்சி எங்கள் பல்கலைக்கழகத்திற்கு பெருமை. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
The post போயிங் பீல்டு 4.0 போட்டி காருண்யா பல்கலை மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் appeared first on Dinakaran.
