கோவை, டிச. 22: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் ஒன்றிய அரசின் சார்பில் எஸ்ஐஆர் தேர்தல் பார்வையாளர் குல்தீப் நாராயணன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று கோவை வந்தார். இன்று கோவையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணி அலுவலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதில் எஸ்ஐஆர் பணிகள் மற்றும் அதில் உள்ள விவரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் வாக்குச்சாவடி வாரியாக ஆப்சென்ட், இறப்பு, முகவரி மாறியவர்கள், இதர வகைப்பாட்டில் உள்ளவர்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்படும். மேலும் தேர்தல் பார்வையாளர், அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.
