×

துடியலூரில் கிரேஸ் ஏஜி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா

பெ.நா.பாளையம், டிச.22: கோவை துடியலூர் சௌடாம்பிகா நகரில் உள்ள கிரேஸ் ஏ.ஜி தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி முதல் தேவாலயத்தின் சார்பில் பலவிதமான கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று மாலை கிறிஸ்துமஸ் பாடல் ஆராதனை தலைமை போதகர் தேவதாசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறுவர்கள் நடனம், வேத வசனம் ஒப்புவித்தல், கிறிஸ்து பிறப்பின் நாடகங்கள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் ஏஞ்சல்ஸ் நிகழ்ச்சியில் சிறுவர் சிறுமியர் உற்சாக நடனம் ஆடினர். பாஸ்டர் டேனியல் ஜெபம் செய்து நிகழ்ச்சியை முடித்து வைத்தார். போதகர் ஜான் வெஸ்லி மற்றும் லியோனா மேக்டலின் சபை மக்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Christmas ,Grace ,AG ,Church ,Thudiyalur ,P.N. Palayam ,Grace AG Church ,Soudhambika Nagar, Thudiyalur, ,Coimbatore ,
× RELATED போக்குவரத்து துறை சார்பில்...