- கூட்டுறவுத் துறை
- கெல்வரகு அரைக்கும் மையம்
- எஸ்.சந்திரன் எம்எல்ஏ
- திருப்பாணி
- திருவள்ளூர்
- திருத்தணி தாலுகா கூட்டுறவு உற்பத்தியாளர்கள் மற்றும் வேளாண் விற்பனை சங்கம்
- கெல்வரகு
- வேலஞ்சேரி…
- கெல்வரகு மில்லிங்
- மையம்
- சந்திரன் எம்.எல்.ஏ
திருத்தணி, மே 6: திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் முறையாக நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகு மாவு விற்பனை செய்யும் வகையில், திருத்தணி தாலுகா கூட்டுறவு உற்பத்தியாளர்கள் வேளாண்மை விற்பனை சங்கத்தின் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கேழ்வரகு அரவை இயந்திரங்கள் வேலஞ்சேரியில் உள்ள கூட்டுறவு சங்க கிடங்கில் அமைக்கப்பட்டது. இந்த கேழ்வரகு அரவை மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அமுதா தலைமை தாங்கினார். கூட்டுறவு உற்பத்தியாளர்கள் வேளாண்மை விற்பனை சங்கத்தின் மேலாளர் உமாவதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ பங்கேற்று கேழ்வரகு அரவை மையத்தை திறந்து வைத்தார். உழவர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு, அரவைப் பணிகள் மேற்கொண்டு அரை கிலோ பாக்கெட்டுகளாக நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
அரை கிலோ பாக்கெட் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அமுதா தெரிவித்தார். இதில், திருத்தணி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராஜேந்திரன், மேலாண்மை இயக்குநர் சுப்பிரமணியம், கூட்டுறவு சார்பதிவாளர்கள் சிதம்பரம், ராஜ்மோகன், திமுக நிர்வாகிகள் சிரஞ்சீவி, ஷெரீப், பாபு, வேலு, கோபி, ஆறுமுகம், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் காளிதாஸ், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் விஜயகுமார், கிளை செயலாளர் கோபி, தொ.மு.ச விற்பனை சங்க நிர்வாகிகள் சஞ்ஜிவிராஜா, நாதன், சுதாகர், ஜெய் பிரதாப், ஜெய்சங்கர், சுதாகர் ராவ் உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
The post கூட்டுறவு துறை சார்பில் கேழ்வரகு அரவை மையம்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
