×

சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி

சென்னை: சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி தெரிவித்துள்ளார்.டெல்லியில் 1008 சம்ஸ்கிரு உரையாடல் அமர்வுகளின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை விருந்தினராக பங்கேற்றார் அப்போது பேசிய அவர், மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசி இருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், “மோடி அரசின் தேசியக் கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது” என்று பேசியுள்ளார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா .இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். “வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசியக் கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்” என்கிறோம். “இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்திற்கு மணி கட்டி அனுப்புவதுதான் தேசியக் கல்விக் கொள்கை”என்கிறோம். இவ்வாறு தெரிவித்தார்.

The post சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்: அமித்ஷாவுக்கு அன்பில் மகேஷ் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Mahesh ,Amitshah ,Chennai ,Amitsha ,1008 Samskru Dialogue Sessions ,Delhi ,Interior Minister ,Amit Shah ,
× RELATED தவெக நடத்திய சமத்துவ கிறிஸ்துமஸ் விழா...