×

இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டக்டர் உற்பத்தி திட்டம் நிறுத்தி வைத்தது அதானி நிறுவனம்

புதுடெல்லி: இஸ்ரேலை சேர்ந்த டவர் செமிகண்டக்டர் நிறுவனத்துடன்இணைந்து சிப் உற்பத்தி செய்யும் திட்டத்தை அதானி நிறுவனம் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை மகாராஷ்டிரா அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கியது. ரூ.85,000 கோடி திட்டத்தில் செயல்படுத்தப்படும் . மேற்கண்ட திட்டத்தை தொடங்குவது தொடர்பாக டவர் நிறுவனத்துடன் அதானி நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் செமிகண்டக்டர் சிப்களுக்கான தேவை எந்த அளவுக்கு உள்ளது என்பதை அதானி நிறுவனம் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதானி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

The post இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து செமிகண்டக்டர் உற்பத்தி திட்டம் நிறுத்தி வைத்தது அதானி நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Adani ,New Delhi ,Tower Semiconductor ,Maharashtra government ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்