×

சித்தேஸ்வரர் கோயிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

இளம்பிள்ளை, ஏப்.28: சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் தேசிய பசுமை படை அமைப்பினர் இணைந்து, நேற்று சுமார் 6000 அடி உயரமுள்ள கஞ்சமலை மேல் சித்தேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில் உள்ளிட்டவை பயன்படுத்தி வருவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைவரும் துணிப்பையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டு, அவர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, சமூக ஆர்வலர் மாதேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சித்தேஸ்வரர் கோயிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sidtheswarar Temple ,Ilampillai ,Salem District Environment Climate Change Department ,National Green Corps ,Kanjamalai ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி...