×

பீகாரைச் சேர்ந்த தேர்தல் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: பீகாரைச் சேர்ந்த தேர்தல் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நேற்று தொடங்கியது. இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள மக்களாட்சி மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச நிறுவனத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 2 நாள் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடுத்திட்டத்தினை நடத்தி வருகிறது. தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தின் மூன்றாவது தொகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது. 229 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள், 12 வாக்காளர் பதிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பீகாரைச் சேர்ந்த மாநில காவல் துறை தொடர்பு அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கான சிறப்பு ஒரு நாள் பயிற்சித் திட்டமும் நேற்று தொடங்கியது. இந்தப் பயிற்சித் திட்டத்தை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர் விவேக் ஜோஷி ஆகியோர் டெல்லியில் தொடங்கி வைத்தனார். அதைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

The post பீகாரைச் சேர்ந்த தேர்தல் கள செயல்பாட்டாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் 2 நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Chief Electoral Officer ,Chennai ,Bihar ,Delhi… ,
× RELATED அரியானாவில் லேசான நிலநடுக்கம்