- அமைச்சர்
- ச. நாசர்
- திருத்தந்தை பிரான்சிஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு
- சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
- வெளிநாட்டு தமிழர் நலன்
- சட்டமன்ற உறுப்பினர்
- இனிகோ இருதயராஜு
- திருத்தந்தை பிரான்சிஸ்
- கத்தோலிக்க சர்ச்

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், பரிவோடும், முற்போக்குக் கொள்கைகளோடும் கத்தோலிக்கத் திருச்சபையினை வழிநடத்தி, பெரும் மாற்றங்களை முன்னெடுத்த ஆளுமையான திருத்தந்தை போப் பிரான்சிஸ் அவர்களின் மறைவு குறித்து அறிந்து மிகவும் வேதனையடைந்ததாகத் தெரிவித்திருந்தார். அதோடு, இன்று (22-4-2025) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ எஸ்.இருதயராஜ் ஆகியோர் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
The post போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்பார்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.
