- உதயநிதி
- கனிமொழி
- கோயம்புத்தூர்
- MNCR கிராண்ட் அரங்கம்
- முதலிபாளையம், கோயம்புத்தூர்
- திமுக
- பிரதி பொது செயலாளர்
- கனிமொழி எம்.பி.
- கோவை மாவட்ட திமுக மகளிர் அணி
- பெண்கள் தன்னார்வலர்கள்
- தின மலர்
கோவை, ஏப். 22: கோவை முதலிபாளையம் எம்.என்.சி.ஆர். கிராண்ட் அரங்கில் வரும் 25ம் தேதி திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள் கூட்டம் மற்றும் மகளிர் பாசறைக் கூட்டம் சிறப்பாக நடத்துவது குறித்தும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 27ம் தேதி கோவை வருவதையொட்டி, அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிப்பது குறித்தும், ஆலோசனைக் கூட்டம் வடகோவையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கி, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, மாநகர் மாவட்ட மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர்கள், தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பகுதி கழக மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் அனைவருக்கும் சேலைகள் வழங்கப்பட்டது. இதில், மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அன்னம்மாள், மாநகர் மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் கனிமொழி முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணை செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட மகளிர் தொண்டரணி தலைவர் சாந்தாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
The post உதயநிதி, கனிமொழி கோவை வருகை குறித்த ஆலோசனை appeared first on Dinakaran.
