×

வார்டு நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்கள்

திருச்செங்கோடு, ஏப்.18: திமுக இளைஞரணி சார்பில், ஊராட்சி கிளைகள் மற்றும் நகர வார்டுகளில் ஒரு அமைப்பாளர், 3 துணை அமைப்பாளர்கள் என்ற அளவிலும், பேரூர் வார்டுகளில் ஒரு அமைப்பாளர், 2 துணை அமைப்பாளர்கள் என்ற அளவிலும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப்ப படிவங்களை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி நகர மற்றும் ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, பூக்கடை சுந்தர், கதிரவன், ஜெகதீஷ், முரளி, கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் வட்டூர் தங்கவேல், சண்முகம், பழனிவேல், தங்கவேல், செல்வராசு, தனராசு, இளங்கோவன், நாச்சிமுத்து, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி வரவேற்றார்.

The post வார்டு நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் appeared first on Dinakaran.

Tags : Thiruchengode ,DMK Youth Wing ,Perur ,Dinakaran ,
× RELATED குடிசை வீடு தீயில் எரிந்து சாம்பல்